ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் அந்நியன்!?

ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் அந்நியன்!?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2005-ம் வெளியான அந்நியன் திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்காத ஷங்கரின் முதல் படமும் அந்நியன் தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்துப் பாடல்களும் செம் ஹிட் அடித்தன. இந்தப் படத்திற்கு பெரிதும் பக்கபலமாக அமைந்தது படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தான். பீட்டர் ஹெயினின் கோரியோகிராஃபில் அனைத்து சண்டைக் காட்சிகளும் வேற லெவலாக இருந்தன.

ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் அந்நியன்!?

அந்நியன் திரைப்படம் எட்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளைத் தட்டிச் சென்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த கிராபிக்ஸ் பிரிவில் தேசிய விருதையும் தட்டிச் சென்றது.

தற்போது பாலிவுட்டில் அந்நியன் திரைப்படம் ரீமேக் ஆகப் போவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்நியன் படத்தின் இந்தி டப்பிங் அங்கு தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால் படத்தை ரீமேக் செய்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்டேட் வெளியாகும் வரை காத்திருப்போம்!

Share this story