அக்டோபரில் தொடங்குகிறது தனுஷின் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு…

அக்டோபரில் தொடங்குகிறது தனுஷின் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் இணைந்து ‘அத்ரங்கி ரே’ (Atrangi Re) என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.  இந்தப்படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
அக்டோபரில் தொடங்குகிறது தனுஷின் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு…
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. அக்‌ஷய் குமார் – சாரா அலிகான் காட்சிகளை பிஹாரிலும், தனுஷ்  காட்சிகளை மதுரையிலும் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டது.
அக்டோபரில் தொடங்குகிறது தனுஷின் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு…
அதற்குள்ளாக கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால், ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது. பின்னர் தில்லி, மும்பையில் அக்‌ஷய்குமாரை வைத்து ஷூட்டிங் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அக்டோபரில் தொடங்குகிறது தனுஷின் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு…

நாளை (ஜூலை 28) தனுஷின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து  வெளியாகி வருகின்றன. அதன்படி, அக்டோபரிலிருந்து , ‘அத்ரங்கி ரே’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே ‘அத்ரங்கி ரே’ படத்துக்கு முன்பாக ‘கர்ணன்’ பணிகளை முடித்துக் கொடுக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது..

Share this story