“உயிர் வாழணும்னா என் கூட வாங்க” – தடுப்பூசிக்காக பிரச்சாரம் செய்த அர்னால்டு…

“உயிர் வாழணும்னா என் கூட வாங்க” – தடுப்பூசிக்காக பிரச்சாரம் செய்த அர்னால்டு…

நடிகர் அர்னால்டு இன்று கொரானா தடுப்பூசி போட்டுகொண்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

கொரானா என்ற அரக்கண் உலகத்தை புரட்டிப்போட்டுள்ளது. உலகில் கொரானா பாதிக்கப்படாத நாட்டை விரல் விட்டு எண்ணிவிடலாம். சீனாவில் தொடங்கிய கொரானா, யாரையும் விட்டு வைக்கவில்லை. அப்படியொரு ருத்ர தாண்டவத்தை ஆடி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

“உயிர் வாழணும்னா என் கூட வாங்க” – தடுப்பூசிக்காக பிரச்சாரம் செய்த அர்னால்டு…

இதற்கு தடுப்பூசி வராதா என மக்கள் புலம்பி கொண்டிருந்தநிலையில் பிரிட்டன், அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்தன. இதன் ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அவசர கால கொரானா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானதா என ஐயம் இன்னமும் இருக்கதான் செய்கிறது.

“உயிர் வாழணும்னா என் கூட வாங்க” – தடுப்பூசிக்காக பிரச்சாரம் செய்த அர்னால்டு…

இந்நிலையில் அமெரிக்காவிலும் தடுப்பூசிப்போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் தடுப்பூசியை போட்டு மக்களுக்கு முன்னூதாரணமாக இருந்து வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டாட்ஜர் ஸ்டேடியம் பிரபல ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்டார். 73 வயதுடைய அர்னால்டு தடுப்பூசி போடும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

“உயிர் வாழணும்னா என் கூட வாங்க” – தடுப்பூசிக்காக பிரச்சாரம் செய்த அர்னால்டு…

அப்போது அர்னால்டு நடித்து புகழ்பெற்ற படமான டெர்மினேட்டர் வசனமான, உயிர் வாழணும்னா என் கூட வாங்க என்று கூறினார். இந்த வசனத்தை கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Share this story