‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்….

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்….

அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்….

‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ‘பார்டர்’. இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். ஆன் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்….

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதையடுத்து தற்போது போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராணுவம் தொடர்பான படமாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்….

வித்தியாசமான முறையில் இந்த படத்தின் டைட்டிலை நேற்றுதான் படக்குழு அறிவித்தது. இதையடுத்து இன்று ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த போஸ்டரில் தென் இந்தியா வரைப்படத்தில் அருண் விஜய் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 28ம் தேதி இந்த படம் உலக முழுவதும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதோடு இந்த படத்தின் திரையரங்க உரிமையை 11: 11 சினிமாஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this story