இந்தியில் ரீமேக்காகும் ‘தடம்’… அருண் விஜய் கேரக்டரில் யார் தெரியுமா ?..

இந்தியில் ரீமேக்காகும் ‘தடம்’… அருண் விஜய் கேரக்டரில் யார் தெரியுமா ?..

அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது.

இந்தியில் ரீமேக்காகும் ‘தடம்’… அருண் விஜய் கேரக்டரில் யார் தெரியுமா ?..

அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘தடம்’. இந்த படத்தை அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான இப்படத்தில் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களாக நடித்து அசத்தியிருந்தார் அருண் விஜய். இந்த படம் வெளியாகி இந்தியா முழுவதும் பாராட்டை பெற்றது.

இந்தியில் ரீமேக்காகும் ‘தடம்’… அருண் விஜய் கேரக்டரில் யார் தெரியுமா ?..

தமிழில் ஹிட்டடித்த இப்படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ரெட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கிஷோர் திருமலா இயக்கும் இப்படத்தில் நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியில் ரீமேக்காகும் ‘தடம்’… அருண் விஜய் கேரக்டரில் யார் தெரியுமா ?..

இதையடுத்து இந்த படம் இந்தியிலும் ரீமேக்காகிறது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பூஷன் குமார் பெற்றிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோவாக சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகிவிட்டார். தற்போது அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஆதித்ய ராய் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வர்த்தகன் கேட்கர் இயக்கவுள்ளார். ஆதித்ய ராய்க்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். விரைவில் இந்த படத்திற்காக ஷூட்டிங் துவங்க உள்ளது.

Share this story