‘எனிமி’ படத்தை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…

‘எனிமி’ படத்தை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…

எனிமி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததையடுத்து ஆர்யா மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

‘எனிமி’ படத்தை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…

விக்ரமின் ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் திரைப்படம் ‘எனிமி’. விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாசும் நடிக்கின்றனர். தமன் இசையில் உருவாகும் இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

‘எனிமி’ படத்தை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…

வித்தியாசமான கதைக்களத்தோடு இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரித்து வருகிறார். ஐதராபாத் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு துபாய்க்கு சென்ற விஷால் மற்றும் படக்குழுவினர், ஒரு மாத காலம் ஷூட்டிங்கை நடத்தினர். பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, இங்கு ஷூட்டிங்கை நடத்தி வந்தனர்.

‘எனிமி’ படத்தை முடித்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…

அந்த ஷூட்டிங்கில் ஆர்யா நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. கொரானா நேரத்திலும் விடாமல் படப்பிடிப்பு நடந்து வந்ததது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அதனை கேக் வெட்டி உற்சாகமாக படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்புக்கு முடிந்ததற்கு இயக்குனர் ஆனந்த் சங்கர், நடிகர் விஷால் ஆகியோருக்கு ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Share this story