‘100’ பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அதர்வா!

‘100’ பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அதர்வா!

‘100’ திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மீண்டும் இரண்டாம் முறையாக நடிக்கவுள்ளார்.


இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தினை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

‘100’ பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அதர்வா!

அப்பா மகனுக்கு இடையே நடக்கும் பாசத்தை கதைக்களமாகக் கொண்டு ஆக்ஷன் திரில்லர் கதையாகவும் இப்படம் உருவாக்கவிருக்கிறது.

இதற்கிடையில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படம் விரைவில் வெளியாக உள்ளது. தள்ளிபோகாதே, ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்தை உள்ளிட்ட சில படங்களிலும் அதர்வா நடித்து வருகிறார்.

Share this story

News Hub