தனுஷின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் எப்போது ? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அத்ரங்கி ரே’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
வரிசையாக 4 படங்களை வைத்துள்ள தனுஷ், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தனுஷ் அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். மார்க் கிரீனியின் 2009 நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்து வருகின்றது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ‘அத்ரங்கி ரே’ படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட்டு 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.