டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த மோசடி… 3 மாதங்களுக்கு ரேட்டிங் நிறுத்தி வைப்பு!

டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த மோசடி… 3 மாதங்களுக்கு ரேட்டிங் நிறுத்தி வைப்பு!

சில தொலைக்காட்சி நிறுவனங்கள் டிஆர்பி ரேட்டிங் தொடர்பான மோசடியில் சிக்கியுள்ள நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ரேட்டிங் அளிப்பதை நிறுத்தி வைக்க பி.ஏ.ஆர்.சி முடிவு செய்துள்ளது.

ஒரு டிவி சேனலை எவ்வளவு பேர் எவ்வளவு நேரம் பார்க்கின்றனர் என்பதை வைத்து டிஆர்பி ரேட்டிங் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ரேட்டிங்கை பி.ஏ.ஆர்.சி என்கிற நிறுவனம் கணக்கிட்டு வருகிறது. தொலைக்காட்சி உள்ள சில குறிப்பிட்ட வீடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து ரேட்டிங் அளவிடும் மீட்டர்களை பொருத்துவார்கள். அந்த வீடுகளில் பார்க்கப்படும் அளவுகளை வைத்து டிஆர்பி கணக்கிடப்பட்டு வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த மோசடி... 3 மாதங்களுக்கு ரேட்டிங் நிறுத்தி வைப்பு!

இந்நிலையில் ரிபப்ளிக் டிவி சேனல், Fakht Marathi மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் மும்பையில் மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டு தங்கள் சேனல்களை தொடர்ச்சியாக பார்க்க வைத்ததன் மூலம், ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளன.

தற்போது இந்த மோசடி வெளியே தெரியவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து 4 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடிக்கு உடந்தையாக பி.ஏ.ஆர்.சி நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த மோசடி… 3 மாதங்களுக்கு ரேட்டிங் நிறுத்தி வைப்பு!

“ஆங்கிலச் சேனல்கள் பார்க்க வாய்ப்பில்லாத பகுதிகளிலும் குறிப்பிட்ட ஆங்கில தொலைக்காட்சியை பார்க்க வைத்துள்ளனர். இதற்கான அந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாக” மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்

ரிபப்ளிக் டிவி இந்தக் குற்றசாட்டை மறுத்ததோடு, இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் எனவும் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்தார். பின்னர் சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரிபப்ளிக் டிவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு செய்தி தொலைக்காட்சிகளின் ரேட்டிங்கை நிறுத்தி வைப்பதாக பி.ஏ.ஆர்.சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Share this story