Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

விக்ரமாதித்யா- பிரேரனாவின் மகத்தான காதல் கதை… ராதே ஷ்யாம் திரைப்படத்தின் பிரம்மாண்ட மோஷன் போஸ்டர்!

பாஹுபலி ஸ்டார் பிரபாஸ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து ராதே ஷ்யாம் படக்குழு ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளனர்.

ராதே ஷ்யாம் படம் குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்திய அளவில் அந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் ஸ்டைலிஷ் ஆன தோற்றம் ரசிகர்களை சுண்டி இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


ஏற்கெனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில் படத்தின் மோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில் சீறிப் பாயும் ரயிலை காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். விகர்மாதித்யா, பிரேரனாவின் அறிமுகக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

Image

மோஷன் போஸ்டரில் ரோமியோ- ஜூலியட், சலீம்-அனார்கலி, தேவதாஸ்- பார்வதி ஆகியோர் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களை அடுத்து விக்ரமாதித்யா- பிரேரனா இந்த வரிசையில் இருக்கின்றனர். மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். வம்சி மற்றும் பிரமோத் யுவி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!