Tuesday, April 13, 2021

ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா தற்போது...

Movie Stills

என் சங்கத்து ஆளுக்கு பிரச்சனைனா முதல் ஆளா வந்து நிப்பேன்… பாரதிராஜா எச்சரிக்கை!

பாரதிராஜா தலைமையில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:

“மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானது. அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன்.

புது சங்கங்கள் உருவாவதென்பது கால மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டது. ஒன்று பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து கொள்கைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும், அல்லது மற்ற சங்கங்களுடன் கலந்து செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை விடுத்து மற்ற சங்கங்களையும் அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, இவை சார்ந்த துறையையே மொத்தமாக நிர்மூலமாக்கிவிடும்.

இதற்குச் சான்றாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. இது காலம் வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு இணையான இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து தயாரிப்பாளர்களுக்கு சேவையாற்றி வந்துள்ளது. இதை இந்தப்புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் இந்த 3 சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

பதவி அதிகாரம் என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால்,சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு சேவை புரியத்தான். இதை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப உணர வேண்டும்.

தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்றுமே ஒரு தாய்ச்சங்கமாகும்.

சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களைத் தனித்தனியாக அழைத்து மிரட்டியும் நிர்வாகிகளுக்கு அவர்களின் படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முற்படுவதையும் அறிந்தேன். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் பல கூறுகளாக உடைந்து அதன் பொலிவிழக்கக் காரணமாக இந்த புதிய நிர்வாகம் இருக்கும் என்பதையும், என் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் பட்சத்தில் முதல் ஆளாக நின்று அதை எதிர்ப்பேன் என்பதையும் எச்சரிக்கையாக இங்கே பதிவு செய்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா தற்போது...

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக...

பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான...

கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

தியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம்...

Actress

TTN Cinema