கமலுக்கு பதில் சிம்புவா ?.. போட்டியாளர்கள் தேர்வு பணிகள் விறுவிறு…

கமலுக்கு பதில் சிம்புவா ?.. போட்டியாளர்கள் தேர்வு பணிகள் விறுவிறு…

பிக்பாஸ் 5வது சீசனை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலுக்கு பதில் சிம்புவா ?.. போட்டியாளர்கள் தேர்வு பணிகள் விறுவிறு…

இந்தியா முழுவதும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, மற்ற மொழிகளைவிட தமிழில் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிந்து 5வது சீசன் துவங்கப்படவுள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி என தனித்துவமான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பிக்பாஸ் டைட்டில் கொடுக்கப்பட்டு வருகிறது.

கமலுக்கு பதில் சிம்புவா ?.. போட்டியாளர்கள் தேர்வு பணிகள் விறுவிறு…

தோராயமாக 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டுதோறும் எப்போது பிக்பாஸ் சீசன் துவங்கும் முன் யார் யார் போட்டியாளர்களாக கலந்துக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோன்ற எதிர்பார்ப்பு இந்தாண்டும் நிலவுகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் முடிக்கப்படும். ஆனால் கடந்தாண்டு மட்டும் கொரோனாவால் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. மாறாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற்றது.

கமலுக்கு பதில் சிம்புவா ?.. போட்டியாளர்கள் தேர்வு பணிகள் விறுவிறு…

இதையடுத்து பிக்பாஸ் 5வது சீசனை தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு எந்த பிரச்சனையும் இருக்காது என்பதால் வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் அரசியலில் பிசியாக இருப்பதால் எப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கேள்வி எழுந்தது.

கமலுக்கு பதில் சிம்புவா ?.. போட்டியாளர்கள் தேர்வு பணிகள் விறுவிறு…

ஆனால் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதையடுத்து பிக்பாஸ் 5வது சீசனை தொகுத்து வழங்க சிம்பு ஓகே சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது. அதனால் திட்டமிட்டபடி ஜீன் மாதம் 3வது வாரத்தில் பிக்பாஸ் தொடங்கும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Share this story