கவுதம் மேனன் பட நடிகையை கரம் பிடிக்கும் பிக்பாஸ் 'ஆரவ்'!

கவுதம் மேனன் பட நடிகையை கரம் பிடிக்கும் பிக்பாஸ் 'ஆரவ்'!

பிக்பாஸ் வின்னர் ஆரவ், நடிகை ராஹியைத் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாடலாக இருந்த  ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆரவ். அதைத்தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
கவுதம் மேனன் பட நடிகையை கரம் பிடிக்கும் பிக்பாஸ் 'ஆரவ்'!
இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ‘ராஜபீமா’ படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
தற்போது ஆரவ் தனது ராஹி என்ற நடிகையை திருமணம் செய்ய உள்ளாராம். ராஹி கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இருவருக்கும் 6-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கவுதம் மேனன் பட நடிகையை கரம் பிடிக்கும் பிக்பாஸ் 'ஆரவ்'!
ஆரவ் – ராஹி இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வருவதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், தனக்கொரு காதலி இருப்பதாக ஆரவ் சொன்னது இவரைத்தான் என்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். இவர்கள் திருமணம் இருவரது வீட்டார் சம்மதத்துடன் நடைபெறுகிறது. திருமணம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story