50 கோடி சம்பளமா? அதிர்ந்த தயாரிப்பாளர்

50 கோடி சம்பளமா? அதிர்ந்த தயாரிப்பாளர்

இந்தி நடிகர் ஒருவர் தான் நடிக்கும் படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் கேட்டதால் படத்தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.

பாலிவுட்டில் பெரும்பாலான படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்றால் போல் அதில் நடிக்கும் முன்னணி நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்தி கொண்டே வருகின்றனர். இது மட்டுமல்லாமல் படத்தில் லாபத்தில் பங்கு கேட்கின்றனர். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஒருவர் அவர் ‌நடிக்கும் புதிய படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். வழக்கமாக 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த அவர், தற்போது 50 கோடி வரை கேட்பதால் படத்தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதனால் கவலையில் உள்ள பட தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம். இந்த நடிகர் பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story