ஒருவழியாக ”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கிற்கு கமிட் ஆன ஹிருத்திக் ரோஷன் !

ஒருவழியாக ”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கிற்கு கமிட் ஆன ஹிருத்திக் ரோஷன் !

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ”விக்ரம் வேதா” .இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்திருப்பர்.

ஒருவழியாக ”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கிற்கு கமிட் ஆன ஹிருத்திக் ரோஷன் !

இந்த படம் தமிழில் நல்ல ஹிட் அடித்ததால் இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி முதலில் ஷாருகானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் அவர் படவாய்ப்பை மறுத்துவிட்டார். பின்னர் நடிகர் அமீர்கானிடமும், சைப் அலிகானிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் ஒப்புக்கொள்ளவே, விஜய்சேதுபதி கேரக்டரில் அமீர்கானும், மாதவன் கேரக்டரில் சைப் அலிகானும் நடிப்பதாக இருத்தது.

ஒருவழியாக ”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கிற்கு கமிட் ஆன ஹிருத்திக் ரோஷன் !

ஆனால் படம் தொடங்கும் வேளையில் அமீர் கான் படத்தில் இருந்து நழுவிட்டார். இந்நிலையில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிகர் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒருவழியாக சம்மதித்துள்ளார். இதனால் இவரும் கடைசி தருவாயில் சொதப்பிவிட கூடாது என்ற நோக்கில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி படவேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

Share this story