20 வருட திரை வாழ்க்கை - கணவருடன் இணைந்து கொண்டாடிய ஜெனிலியா.

photo

ஷங்கரின்பாய்ஸ்படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகி  ரசிகர்கள் மத்தியில் கியூட் தேவதையாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தினார். இவர் இந்தியில் தனது முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரித்தீஷ் தேஷ்முக்கை காதலித்து 2012 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

photo

photo

இந்த காதல் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மிக பிரபலமான பாலிவுட் ஜோடியாக வலம்வரும் இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருவது வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட ஜெனிலியா, கடந்த சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து தலைகாட்டி வருகிறார்.

photo

photo

அதுமட்டுமல்லாமல் கணவர் ரித்தீஷ் தேஷ்முக் நடித்துள்ள ‘வேத்’ என்னும் மராட்டி படத்திலும் நடித்துள்ளார். இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால்,  இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி மும்பையில் கொண்டாடியுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story