சென்சார் கெடுபிடி; லட்சுமி ஆக மாறிய ‘லட்சுமி பாம்’
காஞ்சா படம் ரிலீஸ் என்றாலே தியேட்டர் எல்லாம் திருவிழா போல ஆகிடுது. அந்த அளவுக்கு காஞ்சனாவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்குது. அதனால்தான் இந்தியிலும் ’லட்சுமி பாம்’ என்று ரீ மேக் ஆகி வர்ற நவம்பர் 9ம் தேதி ஓடிடி தளமன ஹாட்ஸ் ஸ்டார் விஐபியில் ரிலீஸ் ஆகுது.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே செம ரெஸ்பான்ஸ். திருநங்கை கேரக்டரில் தூள் கிளப்பும் அக்ஷய்குமாரின் முழு ஆட்டத்தையும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
தமிழில் காஞ்சனா என்று வைத்த பெயரை பாலிவுட் ரசிகர்களுக்காக லட்சுமி பாம் என்று வைத்தார் ராகவா லாரன்ஸ். லட்சுமி வெடியை போல் வெடிக்கும் கேரக்டர் என்பதால் அந்த டைல்லிலை வைத்திருந்தார் லாரன்ஸ். ஆனால், அந்த பாம் என்ற சொல் சென்சாருக்கு உறுத்தலை தந்திருக்கிறது.
தணிக்கை சான்றிதழுக்காக இப்படம் திரையிடப்பட்டது, படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், லட்சுமி பாம் என்ற பெயருக்கு அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள். டைட்டிலுக்கான காரணத்தை லாரன்ஸ் எடுத்துச்சொல்லியும், சென்சார் உறுப்பினர்கள் கெடுபிடியாக இருந்ததை அடுத்து லட்சுமி பாம் என்பதில் இருந்த ‘பாம்’ நீக்கப்பட்டு, ‘லட்சுமி’ என்ற பெயரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிரார் லாரன்ஸ்.