அமிதாப் பச்சன் உடன் படப்பிடிப்பில் ரஷ்மிகா... வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை ரஷ்மிகா மந்தான்னா பாலிவுட்டில் அமிதான் பச்சன் உடன் நடித்து வரும் புதிய படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரஷ்மிகா தான் தற்போது தென்னிந்தியாவின் அசுர வளர்ச்சியில் முன்னேறி வரும் நடிகை. தற்போது ரஷ்மிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு படத்தில் நடித்துள்ளார்.
தற்போது தனது இரண்டாம் பாலிவுட் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார். இதனால் ஒட்டுமொத்த நாட்டின் கவனைத்தையும் ஈர்த்தார் ரஷ்மிகா. அமிதாப் பச்சன் உடன் ரஷ்மிகா நடிக்கும் அந்தப் படத்திற்கு ‘குட்பை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .
அமிதாப் பச்சன் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து ரஷ்மிகா பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். தற்போது அவர் குட் பை படத்தின் படப்பிடிப்பும் பங்கேற்று வருகிறார். அமிதாப் பச்சன் உடன் ரஷ்மிகா காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதையடுத்து அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடிக்க இருக்கும் அனிமல் படத்திலும் ரஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.