பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரானா உறுதி.. வீட்டு தனிமையில் இருப்பதாக தகவல் !
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரானா தொற்று படிபடியாக அதிகரித்து வருகிறது. இது கொரானாவின் 4வது அலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டிலேயே மும்பை நகரில் கொரானா தொற்று அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400-ஆக இருக்கிறது. அந்த வகையில் மும்பையில் வசிக்கும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் கொரானாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றனர். இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டு தனிமையில் ஷாருக்கான் சிகிச்சை பெற்று வருகிறார். ஷாருக்கான், விரைவில் நலம்பெற வேண்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Just came to know that our Brand Ambassador Shahrukh Khan has been detected covid positive. Pray fastest recovery for the superstar. Get well Shahrukh! Spring back asap!
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2022
நடிகர் ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

