வாடகை தாய் மூலம் 2வது முறையாக தாயாகவுள்ள பாலிவுட் நடிகை.. பிரபலங்கள் வாழ்த்து !

priyanka chopra

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இரண்டாவது குழந்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் விஜய்யின் ‘தமிழன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். 

priyanka chopra

கடந்த 2018-ஆம் ஆண்டு ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோனாஸை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து வாடகை தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றுக்கொண்டார். இந்த குழந்தையை ரசிகர்களுக்கும் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். 

priyanka chopra

இந்நிலையில் இரண்டாவது முறையாக வாடகை தாய் மூலம் பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துக்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் பிரியங்கா சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Share this story