ஷாருக் கானின் 'ஜவான்' படத்திற்காக அட்லீ உடன் சென்னை வந்த தீபிகா படுகோனே!

atlee-and-deepika-3

ஜவான் படத்திற்காக  நடிகை தீபிகா படுகோனே சென்னை வந்துள்ளார். 

தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள்  மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே! மீண்டும் இந்த ஜோடி எப்போது இணையும் என்று ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். 

பதான் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

jawan-cast-34

இந்நிலையில் ஜவான் படத்திலும் தீபிகா படுகோனே இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில்  'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  

இந்தப் படத்தில் ஷாருக் கான் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். தற்போது இந்தப் படத்தில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தீபிகா படுகோனே அப்பா ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். 

இந்நிலையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்காக தீபிகா படுகோனே அட்லீ மற்றும் ஷாருக்கான் உடன் சென்னை வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் அட்லீ உடன் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Share this story