சர்சையில் சிக்கிய, காவி உடையணிந்து தீபிகா செய்த செயல் – ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் ‘பதான்’ டிரைலர் வெளியீடு.
பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பதான்’. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இந்த படத்த இயகுநரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே பதான் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதன எதிர்பார்பை அதிகரித்துள்ளது. அதிரடி ஆக்க்ஷனில் , ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் விதமாக டிரைலர் அமைந்துள்ளது. அதிலும் தீபிகாவின் லுக், ஸ்டண்ட் காட்சிகள் மிரளவைக்கிறது. ஏற்கனவே சர்சையில் சிக்கிய காவி உடை, தற்போது டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது. அந்த உடையை அணிந்து தீபிகா ஸ்டண்ட் செய்துள்ளார்.