சல்மான் கான் நடிக்கும் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்!

சல்மான் கான் நடிக்கும் புதிய பாலிவுட் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேவிஸ்ரீ பிரசாத் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். அவர் இசையமைப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படத்தின் பாடல்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. எனவே அவருக்கு இந்திய அளவில் பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் தான் தற்போது நடித்து வரும் ‘கபி ஈத் கபி தீவாளி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது வீரம் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. சல்மான் கான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கபி ஈத் கபி தீவாளி’ என்ற பெயரில் இந்தியில் இப்படம் ரீமேக் அகிறது. நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.