இந்தியை விட தமிழ் சினிமாவைதான் விரும்பி பார்க்கிறேன் - இயக்குனர் அனுராக் காஷ்யப்

இந்தியை விட தமிழ் சினிமாவில் கலாச்சாரம் இருக்கிறது என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் அனுராக் காஷ்யப். தனது திரைப்படங்கள் மூலம் வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகிறார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது திரைப்படங்கள் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
இவரது இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘டோபாரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இணைத்தள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சமீபகாலமாக இந்தி சினிமாக்களை பார்க்கவே பிடிக்கவில்லை. இந்தியில் உள்ள இயக்குனர்கள் புதிதாக யோசிப்பதில்லை.
மீண்டும் மீண்டும் பழைய படங்களின் கதையை திரைப்படமாக எடுக்கின்றனர். ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் புதிய முயற்சிகள் எடுக்கப்படுகிறது. மொழி படங்களில் கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இந்தியில் அவ்வாறு இல்லை. இப்போதெல்லாம் இந்தி படங்களை விட தமிழ், மலையாள படங்களை விரும்பி பார்க்கிறேன் என்று கூறினார்.