கர்ப்பமானதை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை... குவியும் வாழ்த்துக்கள் !
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் கபூர் மற்றும் ஆலியா பட். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த ஜோடி எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ரன்வீர் கபூர் வீட்டில் பிரம்மாண்ட முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியா பட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையொட்டி மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் லவ் சிம்பிளையும் பதிவிட்டுள்ளார். ஆலியா பட்டின் இந்த அறிவிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.