பிரபல காமெடி நடிகர் மரணம்... அதிர்ச்சியில் பாலிவுட் உலகம் !
பிரபல காமெடி நடிகரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் ஸ்ரீவஸ்தவா. ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய அவர், அதன்பிறகு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அவர் நடிப்பில் வெளியான பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவை.
சினிமாவை தவிர முன்னணி தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதையடுத்து டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
41 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவிலை. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார். அவரின் மரணம் குறித்து குடும்பத்தினர் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.பிரபல காமெடி நடிகராக இருந்த ஸ்ரீவஸ்தவாவின் திடீர் மரணம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.