பெரிய மார்பகங்கள் இல்லாததால் பட வாய்ப்பு கிடைக்கல... நடிகை ராதிகா ஆப்தேவின் ஆதங்கம்!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் திறமையான நடிகைகளில் முக்கியமானவர். ஷோர் இன் தி சிட்டி, பேட் மேன், அந்தாதுன் மற்றும் கபாலி உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
என்ன தான் வெளியில் இருந்து பார்க்கும் போது வியப்பளிக்கும் திரையுலகம் அதே அளவிற்கு இருந்த பக்கத்தையும் கொண்டிருக்கிறது. அந்த இருண்ட பக்கத்தை அடிக்கடி சுட்டிக் காட்டுபவர் ராதிகா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட அவர், தனக்கு பெரிய உதடுகள் அல்லது பெரிய மார்பகங்கள் இல்லாததால் சமீபத்தில் ஒரு படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மற்றொரு நடிகை கவர்ச்சியாக இருந்ததால் தயாரிப்பாளர்கள் மற்றொரு நடிகையைத் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிவித்துள்ளார்.
தனது கால்கள், மார்பகங்கள், மூக்கு மற்றும் கன்னங்களின் முன்னேற்றத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய பலர் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் பட வாய்ப்புகளை பெற தான் ஒருபோதும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மாட்டேன் என்றும் ராதிகா தெரிவித்துள்ளார்.
"இந்த எண்ணம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. பெண்கள் சக்திவாய்ந்த பொறுப்புகளை ஏற்றால் எதிர்காலத்தில் விஷயங்கள் மாறும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.