இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'பிரம்மாஸ்த்ரா' முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ranbir-and-alia

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் 'பிரம்மாஸ்த்ரா' படத்தின்  முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. 

ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் இந்தியாவின்  பிரம்மாண்ட படைப்பாக 'பிரம்மாஸ்த்ரா'  என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

brahmastra

'பிரம்மாஸ்த்ரா', பண்டைய இந்தியா மற்றும் தற்போதைய மாடர்ன் இந்தியா இணைந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ளது 'பிரம்மாஸ்த்ரா'.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

Brahmastra

'பிரம்மாஸ்த்ரா' திரைப்படம்மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. தற்போது முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ரன்பிர் மற்றும் ஆலியா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உற்சாகமாகக் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

Brahmastra

Share this story