‘எமர்ஜென்சி’ படத்தை முடித்த கங்கனா ரனாவத்... மேக்கிங் வீடியோ வெளியீடு !

Emergency

‘எமர்ஜென்சி’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் சாதித்த பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார் பாலிவுட் பிரபல நடிகை கங்கனா ரனாவத். ஏற்கனவே  சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சிராணி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார். 

Emergency

அந்த வகையில் இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக்கி வருகிறார். இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் முக்கியமானது அவர் கொண்டு வந்த ‘எமர்ஜென்சி’ சட்டம். அதை வைத்துதான் இந்த படத்தையே கங்கனா உருவாகியுள்ளார். 

Emergency

இந்த படத்தில் இந்திராகாந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா, படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தயாரிப்பாளராக இருக்கும் கங்கனா, தனது சொத்தை அடமானம் வைத்துதான் படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ரித்தேஷ் ஷா கவனித்துள்ளார்.

Emergency

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளதாக கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இதையொட்டி படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.  

Emergency


 

Share this story