சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய இந்தி வெப் சீரிஸ்... ஸ்பெஷல் அப்டேட்!
சித்தார்த் நடிப்பில் உருவாகிவரும் புதிய வெப்சீரிஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தற்போது புதிய வெப் சீரிஸ் மூலம் ஓடிடி தளத்தில் அவர் அறிமுகமாக இருக்கிறார். எஸ்கேப் லைவ் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது. சித்தார்த் குமார் தேவாரி இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்.ஜெய மிஸ்ரா மற்றும் சித்தார்த் குமார் திவாரி இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை எழுதியுள்ளனர்.
ஜாவேத் ஜாஃப்ரி, ஸ்வேதா திரிபாதி ஷர்மா, சுமேத் முத்கல்கர், ஸ்வஸ்திகா முகர்ஜி, பிளாபிதா போர்தாகூர், வாலுசா டிசோசா, ரித்விக் சாஹோர், கீதிகா வித்யா ஓஹ்லியான், ஜக்ஜீத் சந்து, ரோஹித் சாண்டல் மற்றும் குழந்தை நடிகர் ஆத்யா ஷர்மா உள்ளிட்ட பலர் இந்த சீரிஸில் நடித்துள்ளனர்.
சித்தார்த் குமார் திவாரியின் ஒன் லைஃப் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரிஸ் 9 எபிசோடுகளைக் கொண்டுள்ளது. மே 20-ம் தேதி முதல் இந்த சீரிஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது.