அமேசான் ப்ரைம் வீடியோவில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாடர்ன் லவ்' சீரிஸ்... இந்திய ரசிகர்களுக்காக ரீமேக் ஆகிறது!

modern-love-23

அமேசான் பிரைம் வீடியோவின் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று மாடர்ன் லவ். இந்த சீரிஸ் தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே நடைபெற்று உறவுகளின் சிக்கல்களை ஆராய்கிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இணைந்து இந்த சீரிஸைத் தயாரிக்கின்றனர். 

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த சீரிஸின் இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த சீரிஸில் அன்னே ஹாத்வே, தேவ் படேல், ஜான் ஸ்லேட்டரி, ஜேன் அலெக்சாண்டர், டினா ஃபே மற்றும் ஆண்டி கார்சியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். 

modern

தற்போது, ​​மாடர்ன் லவ் சீரிஸ் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு ரீமேக் ஆக உள்ளது. அமேசான் பிரைம் வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு மாடர்ன் லவ் சீரிஸின் இந்திய பதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த சீரிஸ் மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய மூன்று நகரங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகிறது.

இந்த தொடர் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Share this story