இந்தியாவே எதிர்பார்த்து வந்த திருமணம்... ஆலியாவைக் கரம் பிடித்த ரன்பிர் கபூர்!
நீண்ட எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்தது. பாலிவுட் ஸ்டார்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த திருமணம் இவர்களின் திருமணம் தான். நேற்று நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் இருவீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
ரன்பீரின் பாலி ஹில் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. ஷாஹீன் பட், மகேஷ் பட், பூஜா பட், கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், கரிஷ்மா கபூர், கரண் ஜோஹர், நவ்யா நவேலி நந்தா மற்றும் ஆகாஷ் அம்பானி உட்பட பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
"இன்று, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட, வீட்டில் ... எங்களுக்கு பிடித்த இடத்தில் - எங்கள் உறவில் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் கழித்த பால்கனியில் - நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஏற்கனவே பல விஷயங்கள் நாங்கள் செய்ய வேண்டி உள்ளதால் மேலும் பல நினைவுகளை உருவாக்க காத்திருக்க முடியாது ... காதல், சிரிப்பு, மௌனங்கள், திரைப்பட இரவுகள், வேடிக்கையான சண்டைகள், மது மகிழ்வுகள் மற்றும் சீனக் கடிகளால் நிறைந்த நினைவுகள். எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் அனைத்து அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது”. என்று ஆலியா தெரிவித்துள்ளார்.
ரன்பிர்- ஆலியாவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.