கையில் சுத்தியுடன் மரண மாஸ் லுக்கில் ரன்வீர்.. ‘அனிமல்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

animal

ரன்வீர் நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகினாக நடித்திருந்தார். இந்திய அளவில் பேசப்பட்ட இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். 

animal

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த படைப்பாக உருவாகிவுள்ள திரைப்படம் ‘அனிமல்’. இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். ரன்பீருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தந்தை மற்றும் மகனின் உணர்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொடூரமான லுக்கில் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story