புதிய வெப் சீரிஸுக்காக தற்காப்பு கலை பயில வெளிநாடு செல்லும் சமந்தா!

samantha

ராஜ் மற்றும் டீகே ஆகியோரது இயக்கத்தில் 'தி பேமிலி மேன் 2' சீரிஸ் மூலம் நடிகை சமந்தா இந்தியில் அறிமுகம் ஆனார். அந்த வெப் இந்தியாவின் அதிக வரவேரற்பு பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக மாறியது. சமந்தா ராஜி என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் அவருக்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.  

Samantha-citadel

அதையடுத்து சமந்தா மீண்டும் பேமிலி மேன் சீரிஸ் இயக்குனர்களாக ராஜ் மற்றும் டீகே இணையுடன் கூட்டணி அமைத்துள்ளார். சிட்டாடல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்த சீரிஸில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர்கள் ரஸ்ஸோ சகோதரர்கள் இந்த சீரிஸைத் தயாரிக்கின்றனர். 

citade-4

சீரிஸில் சமந்தாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்நிலையில் சமந்தா மிக்ஸுடு மாட்ஷியல் ஆர்ட்ஸ்(MMA) என்பதும் தற்காப்பு கலையை கற்று வருகிறாராம். அதற்காக அவர் வருண் தவான் உடன் விரைவில் பாங்காக்கிற்குச் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென், சமந்தாவுக்கு MMA யில் கடுமையான பயிற்சி எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

Share this story