பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா!?

ayush-and-samantha3

புதிய பாலிவுட் படத்தில் நடிகை சமந்தா, ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா டீகே இயக்கத்தில் உருவான 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அந்த சீரிஸ் அவருக்கு இந்தியா முழுவதும் எண்ணிலடங்கா ரசிகர்களை உருவாக்கியது.

அதையடுத்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனார். கடந்த சில மாதங்களாக சமந்தா பாலிவுட்டில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

samantha-and-ayushman

இந்நிலையில் தற்போது சமந்தா, இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை Maddock Films நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பெரிய பெட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தை அடுத்து நடிகை டாப்ஸி புதிதாக துவங்கியுள்ள Outsiders நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்திலும், கரண் ஜோகர் தயாரிப்பில் மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Share this story