திரைப்படமாக உருவாகும் சாவர்க்கரின் வாழ்க்கை... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் பிரபலமானவர் வீரசாவர்க்கர். தற்போது சாவர்க்கரின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. மகேஷ் வி மஞ்ச்ரேக்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆனந்த் பண்டிட் மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரன்தீப் ஹூடா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அடுத்த மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. லண்டன், மஹாராஷ்ட்ரா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரன்தீப் ஹூடா போஸ்டரில் அப்படியே சாவர்க்கர் போலவே தோற்றமளிக்கிறார். படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சாவர்க்கர் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வகைகளில் விமர்சிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும் வருவதால் இந்தப் படம் பேசுபொருளாக மாறும் என்பது உறுதி!