"தலைவர் ஆசீர்வாதம், தளபதியுடன் உரையாடல்" - நடிகர் ஷாருக்கானின் மாஸ் ட்வீட்!!

ttn

சென்னையில் 30 நாட்கள் நடைபெற்ற 'ஜவான்' படப்பிடிப்பு குறித்து நடிகர்  ஷாருக்கான்  ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார். 

tn

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் விஜய் சேதுபதி ,நயன்தாரா உள்ளிட்டோ நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விஜய் சேதுபதி ஷாருக்கான் நேரடி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அண்மையில் சென்றிருந்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் , இந்த ஒரு மாதம் தனது படக்குழுவினருக்கு அருமையான 30 நாள்.  தலைவர் ரஜினிகாந்த் தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார்.  நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் உரையாடல்,  அட்லி மற்றும் மனைவி பிரியா அட்லியின் அருமையான விருந்தோம்பல்.  அனைத்துமே சிறப்பாக அமைந்தது இதற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிக்கன் 65 செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story

News Hub