அடித்து நொறுக்கும் ஷாருக்கான்.. பட்டையை கிளப்பும் ‘பதான்’ டீசர்

pathaan

 ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் உலகில் அசைத்த முடியாத நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இன்றைக்கும் இளம் நடிகர்களுடன் போட்டிப்போட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் பதான், ஜவான், டுங்கி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

pathaan

இந்த படத்திற்கு முன்னரே ஷாருக்கான் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘பதான்’. சூப்பர் ஹிட் படமான ‘வார்’ படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

pathaan

யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக உருவாகும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று உருவாகி வருகிறது. இந்நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கான் ஆக்ஷனில் அடித்து நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகியுள் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story