ஜவானாக மிரட்டும் ஷாருக்கான்... புதிய போஸ்டர் வெளியீடு !

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மிரட்டும் வகையில் இருக்கும் ‘ஜவான்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கும் முதல் பாலிவுட் படமாக உருவாகிறது ‘ஜவான்’. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் உருவாகும் இந்த படம் ஷாருக்கானின் முதல் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தை வரும் ஜூன் 2-ஆம் தேதி 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் புதிய ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷாருக்கான் மிரட்டலாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.