ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ஷாருக்கானின் ‘பதான்’... மிரட்டலான டிரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய் !

pathaan

ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

பாலிவுட் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ‘பதான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்தப் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

pathaan

இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்தில் மிரட்டலாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் விஜய் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேறு நடிகரின் படத்தின் டிரெய்லரை முதன்முறையாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

pathaan

இதற்கிடையே இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பேஷ்ராம் என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்றாலும் கடும் விமர்சனங்களை பெற்றது. இதற்குக் காரணம் அந்த பாடலின் காட்சியில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்தார். இதை பார்த்த பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் என கடுமையான விமர்சனங்களை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story