விறுவிறுப்பாகும் ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்.. ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட் !
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் குறித்து ஜிவி பிரகாஷ் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் சூப்பர் ஹிட்டடித்த திரைப்பமான ‘சூரரைப்போற்று’, தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் தமிழில் உருவாகியிருந்தது.
தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ராதிகா மதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்காக புதிய பாடல்களை உருவாக்கி வருகிறோம். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.