மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் தமன்னா... புதிய படத்தின் அறிவிப்பு !

tammanna

 மூன்று மொழிகளில் உருவாகும் நடிகை தமன்னாவின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

tammanna

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா, தற்போது இந்தியிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால் இந்தியிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியாக இந்தி திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன. 

tammanna

அந்த வகையில் நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மதூர் பண்ட்ராக்கர் இயக்கி வருகிறார்.  தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் சவுருப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் ஐத் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். 

tammanna

இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் ஜங்கிள் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதோடு படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் விரைவில் கூடுதல் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

Share this story