ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள விஜய் சேதுபதியின் ‘ஃபார்சி’... புதிய வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு !

farzi

ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘ஃபார்சி’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் ராஜ் மற்றும் டிகே. இவர்களது அடுத்த படைப்பாக உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘ஃபார்சி’. இந்த தொடரில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

farzi

இந்த வெப் தொடரில் கதாநாயகனாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.  க்ரைம் த்ரில்லரில் இந்த வெப் தொடரின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி அமேசான் ப்ரைம் இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இந்த வெப் தொடரின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கள்ளநோட்டு அச்சடித்து விநியோகம் செய்யும் பாதாள உலகத்தை கதைதான் இந்த வெப் தொடர். இந்த வெப் தொடரில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். முதல்முறையாக இந்த வெப் தொடருக்கு இந்தியில் சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story