தமிழில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘ஃபார்சி’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

farzi

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபார்சி‘ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த வெப் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே  இயக்கியிருந்தனர். சமந்தா நடித்திருந்த இந்த தொடர் சில சர்ச்சையிலும் சிக்கியது. இந்த வெப் தொடரின் வெற்றிக்கு பிறகு ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘ஃபார்சி’. 

farzi

இதில் ஷாகித் கபூர் ஹீரோவாகவும், ராஷி கண்ணா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லரில் இந்த வெப் தொடரின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் தமிழிலும் வெளியாகவுள்ளது. இந்த வெப் தொடரின் தமிழ் வெர்னில் ஷாகித் கபூருக்கு நடிகர் ஜீவா டப்பிங் கொடுத்துள்ளார். 

farzi

ஏற்கனவே இந்த வெப் தொடர் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் மாஸான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

 

Share this story