காந்தி ஜெயந்தியில் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் அறிவிப்பு... உற்சாகமான ரசிகர்கள் !

GandhiTalks

காந்தி ஜெயந்தியையொட்டி விஜய் சேதுபதி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் முக்கிய நடிகரான விஜய் சேதுபதி, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் சில படங்களை நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைபபடம்தான் ‘காந்தி டாக்ஸ்’.

GandhiTalks.

பிரபல பாலிவுட் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பேலேகர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்தசாமி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

GandhiTalks.

இந்தப் படம் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.  இந்த படம் வசனங்களே இல்லாமல் மௌன படமாக உருவாகி வருகிறது. அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் வீடியோ ஒன்றையும் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story