விஜய் சேதுபதியின் பாலிவுட் படத்திற்கு சிக்கல்.. ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு !

Merry Christmas

விஜய் சேதுபதியின் ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வரும் அவர், தற்போது தெலுங்கில் பிசியான நடிகராக மாறி வருகிறார். இதையடுத்து இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். 

Merry Christmas

அந்த வகையில் ‘அந்தாதூன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Merry Christmas

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இப்படத்தின் பணிகள் நிறைவுபெறாததால் படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு சம்மருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story