பாலிவுட்டில் மிரட்டும் விஜய் சேதுபதி.. புதிய வெப் தொடரின் தலைப்பு அறிவிப்பு !

Farzi

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய வெப் தொடரின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் இயக்குனரான ராஜ் மற்றும் டிகே  இயக்கத்தில் புதிய வெப் தொடர் உருவாகி வருகிறது. இதில் ஷாகித் கபூர் ஹீரோவாகவும், ராஷி கண்ணா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 

Farzi

பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடித்தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவுபெற உள்ள இந்த வெப் தொடரை பார்க்க ரசிகர்கள் ஆர்முடன் உள்ளனர். 

Farzi

இந்நிலையில் இந்த வெப் தொடரின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தொடருக்கு ஃபர்ஸி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் தலைப்பு வெளியிட்டு விழாவில் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி மிரட்டு வகையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Share this story