ஷாருக்கான் படத்தை துவங்கிய அட்லி.. முக்கிய அப்டேட்

sharuk khan
ஷாருக்கான் - அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 

தமிழ்  திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லி, பாலிவுட்டில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். 

sharuk

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ஸ்கிரிட் பணிகளை முழுவதுமாக அட்லி முடித்துவிட்டார். அதேபோன்று அண்மையில்தான் ஷாருக்கானை வைத்து போட்டோஷூட்டை நடத்தி முடித்திருக்கிறார். தற்போது முதற்கட்ட பணிகள் நடந்துள்ள நிலையில் மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. இதற்கிடையே ‘பிகில்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ் ஆகிய அதே படக்குழுவினரை இந்த படத்தில் களமிறக்கியுள்ளார் அட்லி. 

atlee

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை வரும் 15ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பை இன்று மும்பையில் துவங்கியுள்ளார் அட்லி. இதில் ஷாருக்கான் கலந்துக்கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story