ஆமீர் கான் மற்றும் ரன்பிர் கபூர் நடிப்பில் உருவாகும் புதிய படம்!?

aamir-and-ranbir-34

ஆமிர் கான் மற்றும் ரன்பிர் கபூர் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆமிர் கான் மற்றும் ரன்பீர் கபூர். பல ஆண்டுகளாக இருவரும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து வருகின்றனர். அமீர்கான் நடிப்பில் வெளியான பீகே படத்தில் ரன்பீர் கபூர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ranbir

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ரன்வீர் மற்றும் ஆமீர் இருவரும் புதிய கதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் இருவரும் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்தப் படத்திற்கான திரைக்கதை இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆமிர் கான் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு முதல் இந்த படம் துவங்க இருப்பதாகவும் பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Share this story