புதிய படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கும் அபிஷேக் பச்சன்!

abhisek-bachan-33

 ஆர் பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 ஆர் பால்கி பாலிவுட்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். சீனி கம், பா மற்றும் ஷமிதாப் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட் வட்டாரத்தில் ஆர் பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் க்ரிக்கெட் வீரராக நடிக்க உள்ளாராம். மேலும் இடது கை பேட்ஸ்மேனாக நடிக்க உள்ளாராம். படத்தின் கதாநாயகியும் கூட கிரிக்கெட் வீரர் தானாம். கதாநாயகிக்கான தேடுதல் தற்போது நடைபெற்று வருகிறது. 

abhishek

ஆர் பால்கி எப்பொழுதும் பச்சன் குடும்பத்0க்கு நெருக்கமானவர். கடந்த சில வருடங்களாக அபிஷேக் பச் கூட்டணியில் ஒரு படம் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்து வருகிறார். கிரிக்கெட் அடிப்படையிலான படத்திற்காக இருவரும் மேம்பட்ட உரையாடல்களைத் தொடங்கியதால் படம் உருவாவது உறுதியாகியுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது பால்கி அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சுப் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் சன்னி தியோல், துல்கர் சல்மான், பூஜா பட் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து  அபிஷேக் பச்சன் உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story